தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

நாடுமுழுவதும் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு

நாடுமழுவதும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :11 டிசம்பர் 2020, 4:01 am

நாடுமழுவதும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
ஆயுர்வேத மருத்துவர்கள் இனி அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசு கடந்த நவ மாதம் அறிவிப்பை வெளியிட்டது. ‘இதுவரை அலோபதி மருத்துவர்கள் செய்து வந்த அறுவை சிகிச்சைகளை இனி ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம்’ என்று கூறப்பட்டுள்ளது. 
இந்த அறிவிப்பு ஆயுர்வேத மருத்துவர்களிடையே வரவேற்பை பெற்றாலும், இந்திய மருத்துவ சங்கம் உள்பட பெரும்பாலான மருத்துவர்கள் இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 
இந்த நிலையில் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து நாடுமழுவதும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர்கள் இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள அடையாள வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் சுமார் 35,000 மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மருத்துவர்களின் இந்த போராட்டத்திற்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவமனை ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.