வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

'கோவாவில் கரோனா பரவலுக்கு திருமண விழாக்களே முக்கியக் காரணம்'

கோவாவில் கரோனா வைரஸ் பரவுவதற்கு திருமண விழாக்கள் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என அரசு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

News image

கோப்புப்படம்

Updated On :11 டிசம்பர் 2020, 6:14 am

கோவாவில் கரோனா வைரஸ் பரவுவதற்கு திருமண விழாக்கள் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என அரசு தலைமை மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

கோவாவில் சமீபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சுமார் நூறு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் ஒரு திருமண விழாவில் ஒன்றாக கலந்துகொண்டுள்ளதாகவும் கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் சிவானந்த் பண்டேகர் தெரிவித்துள்ளார். 

மேலும், கரோனா வைரஸ் தொற்று பரவும் இக்காலத்தில் மக்கள் அலட்சியமாக முகக்கவசமின்றி திருமண விழாக்களில் கலந்துகொள்கிறார்கள். புதிதாக தொற்று பாதிப்பு ஏற்படுத்துவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று கூறிய அவர், கரோனா வைரஸ் குறித்து மக்களின் மனதில் இருந்த பயம் மெதுவாக மறைந்து வருகிறது என்றார். 

எனினும் கரோனா இரண்டாம் அலை பல்வேறு நாடுகளில் பரவி வருவதால் நம் நாட்டில் அதுபோன்ற ஒரு நிகழ்வைத் தடுக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் கூறினார். 

கோவாவில் இதுவரை 49,131 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 703 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.