ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பொல்லாராம் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. இதில் பல தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
விந்தியா ஆர்கானிக் என்ற ரசாயன தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்தவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இதையும் படிக்கலாமே.. வீணாகும் உணவை சேகரித்து தினமும் 2,000 பேருக்கு உணவளிக்கும் இளைஞர்
தீப்பற்றிய ரசாயன ஆலைக்குள் சில தொழிலாளர்கள் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்டமாக மூன்று தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்துள்ளன. தீ விபத்து குறித்து தங்களுக்கு நண்பகல் 1.30 மணிக்கு தகவல் வந்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரசாயன ஆலையில் பயங்கர வெடிச் சத்தம் கேட்டதாகவும் அதைத் தொடர்ந்து தீப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. வெடிச்சத்தம் கேட்ட போது, ரசாயன ஆலையின் மேற்கூரை பிய்ந்து காற்றில் பறந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரான் பிடியில் உள்ள இந்திய மாலுமி பத்திரமாக உள்ளாா் - மத்திய அரசு தகவல்

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப். 28 வரை மழைக்கு வாய்ப்பு

ஆன்த்ரோபிக் ‘மித்தோஸ்’ ஏஐ - புதிய அச்சுறுத்தல்: நிதியமைச்சா் எச்சரிக்கை

இஸ்ரேல் - லெபனான் போா் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

