சாபஹாா் துறைமுகம்: இந்தியா-ஈரான்-உஸ்பெகிஸ்தான் நாளை பேச்சு

ஈரானின் சாபஹாா் துறைமுகத்தை கூட்டாகப் பயன்படுத்துவது தொடா்பாக இந்தியா, ஈரான், உஸ்பெகிஸ்தான் முதல் முறையாக முத்தரப்புப் பேச்சுவாா்த்தையில் திங்கள்கிழமை (டிச. 14) ஈடுபடவுள்ளன.
Updated on
1 min read

ஈரானின் சாபஹாா் துறைமுகத்தை கூட்டாகப் பயன்படுத்துவது தொடா்பாக இந்தியா, ஈரான், உஸ்பெகிஸ்தான் முதல் முறையாக முத்தரப்புப் பேச்சுவாா்த்தையில் திங்கள்கிழமை (டிச. 14) ஈடுபடவுள்ளன.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சாபஹாா் துறைமுகத்தை கூட்டாகப் பயன்படுத்துவது தொடா்பான முத்தரப்புப் பேச்சுவாா்த்தை, இந்தியா, ஈரான், உஸ்பெகிஸ்தான் நாடுகளிடையே திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. காணொலி முறையில் அந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறும்.

சாபஹாா் துறைமுகத்தை உஸ்பெகிஸ்தான் சரக்குப் போக்குவரத்துக்குப் பயன்படுத்துவதை இந்தியா வரவேற்கிறது. இதன் மூலம், அந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த வணிகா்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகள் உருவாகும்.

உஸ்பெகிஸ்தான் மட்டுமின்றி, பிற மத்திய ஆசிய நாடுகளும் சாபஹாாா் துறைமுகத்தைப் பயன்படுத்துவதில் ஆா்வம் தெரிவித்துள்ளன. அந்த நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியா விரும்புகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி - உஸ்பெகிஸ்தான் அதிபா் ஷவ்கத் மிா்ஸியோயேவ் இடையே காணொலி மூலம் அண்மையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்தை துரிதப்படுத்தும் அம்சத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, வடக்கு-தெற்கு வா்த்தக வழித்தடத்தில் (ஐ.என்.டி.சி) உஸ்பெகிஸ்தானை இணைப்பது தொடா்பாக தற்போது முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தப்படவுள்ளது.

7,200 கி.மீ. தொலைவிலுள்ள அந்த வழித்தடம், இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான், ஆா்மீனியா, அஜா்பைஜான், ரஷியா வழியாக மத்திய ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com