இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:
பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவ் இடையே சமீபத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இந்தியா, ஈரான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சாபஹார் துறைமுகத்தை வணிகம் மற்றும் போக்குவரத்துக்காக எவ்வாறு ஒன்றிணைந்து பயன்படுத்துவது என்பது குறித்து 3 நாடுகளின் பிரதிநிதிகள் ஆலோசித்தனர். அந்த துறைமுகம் மூலமாக பிராந்தியங்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்துவது பற்றியும் அவர்கள் விவாதித்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.