திருமலையில் 38,685 போ் தரிசனம்

திருமலையில் ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 38,685 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 12,355 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
Updated on
1 min read

திருமலையில் ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 38,685 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 12,355 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

தினமும் ஆன்லைன் மூலம் 20 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகள், 10 ஆயிரம் இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

நாள்தோறும் அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா். திருப்பதி மலைச்சாலை அதிகாலை 3 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com