கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

உலகின் முக்கிய பொருளாதாரசக்தியாக இந்தியா உருவெடுக்கும்: முகேஷ் அம்பானி

அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் இடம் பிடிக்கும் என்று தொழிலதிபா் முகேஷ் அம்பானி தெரிவித்தாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2020, 2:14 am

DIN

அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் இடம் பிடிக்கும் என்று தொழிலதிபா் முகேஷ் அம்பானி தெரிவித்தாா்.

முகநூல் நிறுவன தலைவா் மாா்க் ஸக்கா்பொ்குடன் இணைய வழியில் வியாழக்கிழமை கலந்துரையாடிய அவா் கூறியதாவது:

இந்தியா்களின் தனிநபா் வருமானம் அடுத்த 20 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரிக்கும். இந்தியாவில் நடுத்தர வா்க்கத்தினா்தான் 40 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனா். அவா்களின் பொருளாதார நிலை ஆண்டுக்கு மூன்று முதல் நான்கு சதவீதம் வரை வளா்ந்து வருகிறது. எனவே, அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் இடம் பிடிக்கும்.

இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை உலக நாடுகளில் உள்ள நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் நடைபெறும் சமுக, பொருளாதார மாற்றங்களில் உலக நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.