மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

திரிணமூல் தலைவர்களை தங்கள் கட்சியில் இணைக்க முயற்சிக்கிறது பாஜக: மம்தா 

திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களை அழைத்து, தங்களது கட்சியில் சேர்க்க பாஜக முயன்று வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

News image

திரிணமூல் தலைவர்களை தங்கள் கட்சியில் இணைக்க முயற்சிக்கிறது பாஜக: மம்தா 

Updated On :16 டிசம்பர் 2020, 10:15 am


திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களை அழைத்து, தங்களது கட்சியில் சேர்க்க பாஜக முயன்று வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கோச்பெஹாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மிக அரிய வாய்ப்பு என்றுக் கூறி திரிணமூல் காங்கிரஸ் கட்சியை, பணப்பைகளைக் கொண்டு பாஜக உடைக்கப் பார்க்கிறது.

பாஜக தலைவர்களின் செயலைப் பாருங்கள், அவர்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சுப்ரதா பக்சியை அழைத்து, பாஜகவில் சேருமாறு கேட்டுள்ளனர். பாஜகவினருக்கு எந்த அரசியல் கொள்கையும், சித்தாந்தமும் இல்லை. ஒன்று அல்லது இரண்டு சந்தர்ப்பவாதிகள் மட்டுமே தங்களது சுயநலத்துக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எங்கள் கட்சித் தலைவர்களை, தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயல்கிறது. எதிர்க்கட்சிகளை உடைக்க பணப்பலத்தை பாஜக நம்புகிறது. ஆனால் நாங்கள் அவர்களை சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.