சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கேரளம்: விபத்தில் பலியான வேட்பாளர் தேர்தலில் அபார வெற்றி

கேரளத்தில் வாகன விபத்தில் பலியான இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளர் உள்ளாட்சித் தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

News image
Updated On :16 டிசம்பர் 2020, 3:34 pm

DIN


கேரளத்தில் வாகன விபத்தில் பலியான இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளர் உள்ளாட்சித் தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளார். 

கேரள உள்ளாட்சித் தேர்தலில் தலக்காடு கிராம பஞ்சாயத்தின் 15-வது வார்டில் இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பாக போட்டியிட்டார் சஹீரா பானு. அவர் தனது பகுதியிலுள்ள வாக்காளர்களிடம் தேர்தல் சீட்டுகளைக் கொடுப்பதற்காக மகனுடன் அமர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராத விதமாக காரில் மோதி விபத்துக்குள்ளாகினர். இதையடுத்து, சஹீரா பானுவுக்கு மலப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

இந்த நிலையில், கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளரைக் காட்டிலும் 248 வாக்குகள் கூடுதலாகப் பெற்று சஹீரா பானு வெற்றி பெற்றுள்ளார்.

இதுபற்றி திரூர் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஹம்சகுட்டி தெரிவித்தது:

"அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவர்கள் 2 அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால், மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த வார்டில் மறுதேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவெடுக்கலாம்."

சஹீரா பானு முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். கடந்த 20 ஆண்டுகளாக கட்சிக்காக தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறார் சஹீரா பானு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.