நாடு முழுவதும் 15.78 கோடியைக் கடந்தது கரோனா பரிசோதனை
நாடு முழுவதும் 15 கோடியே 78 லட்சத்து 5 ஆயிரத்து 240 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை 15.78 கோடி கரோனா பரிசோதனைகள்

நாட்டில் இதுவரை 15.78 கோடி கரோனா பரிசோதனைகள்
புதுதில்லி: நாடு முழுவதும் 15 கோடியே 78 லட்சத்து 5 ஆயிரத்து 240 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 99 லட்சத்து 51 ஆயிரத்து 72 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மஹாராஷ்டிரம் தொடர்ந்து முதலிடத்திலும், கர்நாடகா இரண்டாம் இடத்திலும், ஆந்திரம் மூன்றாவது இடத்திலும் இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, நாடு முழுவதும் டிசம்பா் 16-ஆம் தேதி வரை 15,78,05,240 பேரிடம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 11,58,960 பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...