விவசாயிகளுக்காகப் போராட்டக் களத்துக்கே முடிதிருத்தும் கடையைக் கொண்டுவந்த இளைஞர்
குருக்ஷேத்திரத்தில் முடிதிருத்தும் கடை நடத்தி வரும் இளைஞர், தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்காகப் போராட்டக் களத்துக்கே வந்து இலவசமாக முடிதிருத்தி வருகிறார்.


புது தில்லி: குருக்ஷேத்திரத்தில் முடிதிருத்தும் கடை நடத்தி வரும் இளைஞர், தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்காகப் போராட்டக் களத்துக்கே வந்து இலவசமாக முடிதிருத்தி வருகிறார்.
குருக்ஷேத்திரத்தில் கடை வைத்திருந்த இவர், போராடும் விவசாயிகளுக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக, தனது கடை ஊழியர்களுடன், தில்லியின் சிங்குர் எல்லைப் பகுதியில் திறந்தவெளியில் கடையைத் திறந்துவிட்டார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு இலவசமாக முடித்திருத்தும் இவர், குருக்ஷேத்திரத்தில் எனது வாடிக்கையாளர்களில் 90 சதவீதம் பேர் விவசாயிகள்தான். எனவே, அங்கிருந்த கடையை மூடிவிட்டு, இங்கு வந்து விவசாயிகளுக்கு ஆதரவாக சேவையாற்ற முடிவு செய்தேன். விவசாயிகளின் போராட்டம் முடியும் வரை நான் இங்குதான் சேவையாற்றிக் கொண்டிருப்பேன் என்கிறார் உற்சாகத்தோடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...