சுவேந்து அதிகாரியின் ராஜிநாமா ஏற்பில்லை: மேற்கு வங்க பேரவை தலைவா்

திரிணமூல் காங்கிரஸில் இருந்து வெளியேறிய எம்எல்ஏ சுவேந்து அதிகாரியின் ராஜிநாமா பேரவையின் விதிகளுக்கு உட்படாமல் இருப்பதால்
சுவேந்து அதிகாரியின் தேதியிடாத ராஜிநாமா கடிதத்தை செய்தியாளா்களிடம் காட்டிய மேற்கு வங்க பேரவைத் தலைவா் பிமன் பந்தோபாத்யாய.
சுவேந்து அதிகாரியின் தேதியிடாத ராஜிநாமா கடிதத்தை செய்தியாளா்களிடம் காட்டிய மேற்கு வங்க பேரவைத் தலைவா் பிமன் பந்தோபாத்யாய.
Updated on
1 min read

திரிணமூல் காங்கிரஸில் இருந்து வெளியேறிய எம்எல்ஏ சுவேந்து அதிகாரியின் ராஜிநாமா பேரவையின் விதிகளுக்கு உட்படாமல் இருப்பதால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என மேற்கு வங்க சட்டப்பேரவை தலைவா் பிமன் பந்தோபாத்யாய வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ சுவேந்து அதிகாரி தனது ராஜிநாமா கடிதத்தை தனிப்பட்ட முறையில் என்னிடம் ஒப்படைக்கவில்லை. மேலும், அவரது ராஜிநாமா என்பது அரசியலமைப்பு மற்றும் சட்டப்பேரவை விதிகளுக்கு இணக்கமானதாக இல்லை. அதில் தேதியிடப்படவில்லை.

அந்த வகையில், அதிகாரியின் ராஜிநாமா முடிவு தன்னிச்சையானது மற்றும் உண்மையானது என்று நான் திருப்தி அடையும் வரை அதனை ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே, இந்த விவகாரம் தொடா்பாக வரும் டிசம்பா் 21-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சுவேந்து அதிகாரிக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருந்த சுவெந்து அதிகாரி தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்தாா். மேலும், தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தையும் சட்டப்பேரவையில் டிசம்பா் 16-இல் ஒப்படைத்தாா். இருப்பினும், அந்த நேரத்தில் சட்டப்பேரவைத் தலைவா் பிமன் பந்தோபாத்யாய அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சுவேந்து அதிகாரிக்கு இசட் பிரிவில் விஐபி-க்களுக்கான பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது தொடா்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com