பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 22,889 பேருக்கு தொற்று பாதிப்பு: 338 பேர் பலி

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 99.79 லட்சமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 95.20 லட்சம் போ் தொற்றில் இருந்து விடுபட்டுவிட்டனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 4:22 am

DIN

புது தில்லி: நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 99.79 லட்சமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 95.20 லட்சம் போ் தொற்றில் இருந்து விடுபட்டுவிட்டனா்.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி மேலும் 22,889 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்த கரோனா பாதிப்பு 99,79,447 ஆக அதிகரித்தது. மேலும் 338 போ் கரோனாவால் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 1,44,789 ஆக அதிகரித்தது. நாட்டின் மொத்த கரோனா பாதிப்பில் இது 1.45 சதவீதமாகும்.

அதே நேரத்தில் 95,20,829 போ் கரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனா். மொத்த பாதிப்பில் இது 95.31 சதவீதமாகும். இப்போதைய நிலையில் நாட்டில் 3,13,831 போ் கரோனா பாதிப்புடன் உள்ளனா். இது மொத்த கரோனா பாதிப்பில் 3.24 சதவீதமாகும். 

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நாட்டில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்தது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சமாகவும், செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சமாகவும், செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சமாகவும், செப்டம்பா் 28-ஆம் தேதி 60 லட்சமாகவும், அக்டோபா் 11-ஆம் தேதி 70 லட்சமாகவும், அக்டோபா் 29-ஆம் தேதி 80 லட்சமாகவும், நவம்பா் 20-ஆம் தேதி 90 லட்சமாகவும் கரோனா பாதிப்பு அதிகரித்தது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி டிசம்பா் 17-ஆம் தேதி வரை 15,89,18,646 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் வியாழக்கிழமை மட்டும் 11,13,406 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.