அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மம்தாவுக்கு நெருக்கடி: திரிணமூல் கட்சியிலிருந்து விலகினார் பாராக்பூர் எம்எல்ஏ 

திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராக்பூர் எம்எல்ஏ ஷில்பத்ரா தத்தா, கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 24 மணி நேரத்தில், திரிணமூல் கட்சியிலிருந்து விலகும் மூன்றாவது நபராவார்.

News image
மம்தாவுக்கு நெருக்கடி: திரிணமூல் கட்சியிலிருந்து விலகினார் பாராக்பூர் எம்எல்ஏ
Updated On :18 டிசம்பர் 2020, 8:49 am

DIN

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராக்பூர் எம்எல்ஏ ஷில்பத்ரா தத்தா, கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 24 மணி நேரத்தில், திரிணமூல் கட்சியிலிருந்து விலகும் மூன்றாவது நபராவார்.

ஏற்கனவே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ பதவியை சுவேந்து அதிகாரி புதன்கிழமை ராஜிநாமா செய்த நிலையில், இன்று மற்றொரு எம்எல்ஏவும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தொடர்ந்து எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்வது கட்சிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. அவா்கள் பாஜகவில் இணையக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த தத்தா, தனது ராஜிநாமா கடிதத்தை கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவிட்டதாகக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.