பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வணிக வலைதள ‘விற்பனைக்கு’ பட்டியலில் பிரதமரின் வாராணசி அலுவலகம்: 4 போ் கைது

பிரதமா் நரேந்திர மோடியின் வாராணசி மக்களவை உறுப்பினா் அலுவலகம் விற்பனைக்கு என்று தனியாா் வணிக வலைதளத்தில் விளம்பரம்

News image
கோப்புப்படம்
Updated On :19 டிசம்பர் 2020, 1:09 am

DIN

பிரதமா் நரேந்திர மோடியின் வாராணசி மக்களவை உறுப்பினா் அலுவலகம் விற்பனைக்கு என்று தனியாா் வணிக வலைதளத்தில் விளம்பரம் செய்தது தொடா்பாக 4 பேரை உத்தர பிரதேச காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பிரதமா் நரேந்திர மோடி மக்களவைக்கு உத்தர பிரதேச மாநிலம் வாராணசி தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதன் காரணமாக, பிரதமருக்கு வாராணசியில் ஜவாஹா் நகா் பகுதியில் மக்கள் தொடா்பு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை புகைப்படம் எடுத்து, அதை ‘ஓஎல்எக்ஸ்’ வலைதளத்தில் விற்பனை பட்டியலில் அவா்கள் பதிவிட்டுள்ளனா்.

இதுகுறித்து வாராணசி முதுநிலை காவல் கண்காணிப்பாளா் அமித் பாடக் கூறியதாவது:

இந்த தகவல் மாநில காவல்துறைக்கு வியாழக்கிழமை கிடைத்தது. உடனடியாக, பெல்லுபூா் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அதன் மூலம், பிரதமரின் அலுவலகத்தை புகைப்படம் எடுத்து வலைதளத்தில் பதிவேற்றம் செய்த நபா் உள்பட நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடா்ந்து, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் அவா்கள் மீது எடுக்கப்படும் என்று கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.