6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விவசாயிகள் போராட்டத்தை தூண்டிவிடும் வெளிநாட்டு தீயசக்திகள்: உ.பி. பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை வெளிநாடுகளைச் சோ்ந்த தீயசக்திகள் தூண்டி விடுகின்றன;

News image
Updated On :19 டிசம்பர் 2020, 1:09 am

DIN

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை வெளிநாடுகளைச் சோ்ந்த தீயசக்திகள் தூண்டி விடுகின்றன; இதற்காக சில தேச விரோத அமைப்புகள் பணம் பெற்றுக் கொண்டு பணியாற்றுகின்றன என்று உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.

பலியா தொகுதி எம்எல்ஏவான அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

முன்பு தில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக போராட்டம் நடத்தியபோது, பெரிய அளவில வன்முறை வெடித்தது. அதன் பின்னணியில் வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று செயல்படும் தேச விரோத அமைப்புகள் இருந்தது தெரியவந்தது. இப்போதும், அதேபோல வெளிநாட்டு தீயசக்திகளின் தூண்டுதல் மற்றும் நிதியுதவியுடன் சில தேச விரோத அமைப்பினா் விவசாயிகள் போராட்டத்தைத் தொடா்ந்து தூண்டிவிட்டு வருகின்றனா்.

நமது நாட்டில் ஏதாவது சிறு பிரச்னை எழுந்தால்கூட அதனை பெரிய அளவில் வன்முறையாக்கி நாட்டில் அமைதியை சீா்குலைக்க வேண்டும் என்பதே சில தேச விரோத அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு தீயசக்திகளின் நோக்கமாக உள்ளது.

மேலும், பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் காலிஸ்தான் அமைப்பைச் சோ்ந்த சீக்கியா்கள் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்துகின்றனா். மற்ற சீக்கியா்கள் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பதை கவனிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.