சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வரும் 5 ஆண்டுகளை பாஜகவுக்குக் கொடுங்கள்: அமித் ஷா பேச்சு

அடுத்த ஐந்து ஆண்டுகளை பாஜகவுக்குக் கொடுங்கள், மேற்கு வங்கத்தை தங்க மாளிகையாக மாற்றிக் காட்டுகிறோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

News image
வரும் 5 ஆண்டுகளை பாஜகவுக்குகொடுங்கள்: அமித் ஷா பேச்சு
Updated On :19 டிசம்பர் 2020, 12:07 pm

DIN


மிட்னாபூர்: அடுத்த ஐந்து ஆண்டுகளை பாஜகவுக்குக் கொடுங்கள், மேற்கு வங்கத்தை தங்க மாளிகையாக மாற்றிக் காட்டுகிறோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக மேற்கு வங்க மாநிலத்துக்குச் சென்றிருக்கும் அமித் ஷா, மிட்னாபூரில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அவர் கூறுகையில், மேற்கு வங்க மாநிலத்தை ஆள, காங்கிரஸ் கட்சிக்கு 30 ஆண்டுகாலத்தை கொடுத்தீர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 27 ஆண்டுகளை அளித்தீர்கள், தற்போது மம்தாவுக்கு 10 ஆண்டுகளைக் கொடுத்திருக்கிறீர்கள், பாஜகவுக்கு வரும் 5 ஆண்டுகளைக் கொடுங்கள், நாங்கள் மேற்கு வங்கத்தை தங்க மாளிகையாக மாற்றிக் காட்டுகிறோம் என்று உறுதிமொழி அளித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள்கள் பயணமாக மேற்குவங்கத்திற்கு சென்றுள்ளார். கொல்கத்தா சென்ற அவர், ராமகிருஷ்ண ஆசிரமத்தில் வழிபாடு நடத்தினார். அதனைத்தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அமித் ஷா, ''இது விவேகானந்தர் பிறந்த இடம். ஆன்மிகத்தையும், நவீனத்துவத்தையும் இணைத்தவர் சுவாமி விவேகானந்தர். அவர் நமக்கு காட்டிய உன்னதமான வழியில் நடப்போம்'' என்று கூறியிருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.