சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு: நாடாளுமன்றக் குழுக்களில் இருந்து ராஜஸ்தான் எம்.பி. ராஜிநாமா

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றக் குழுக்களில் இருந்து ராஜிநாமா செய்வதாக ராஜஸ்தான் எம்.பி. அனுமான் பெனிவால் சனிக்கிழமை அறிவித்தார்.

News image
ராஜஸ்தான் எம்.பி. அனுமான் பெனிவால்
Updated On :19 டிசம்பர் 2020, 1:31 pm

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றக் குழுக்களில் இருந்து ராஜிநாமா செய்வதாக ராஜஸ்தான் எம்.பி. அனுமான் பெனிவால் சனிக்கிழமை அறிவித்தார்.

தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 24 நாள்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவளித்து வரும் நிலையில் ராஜஸ்தானின் நாகூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அனுமான் பெனிவால் சனிக்கிழமை மூன்று நாடாளுமன்றக் குழுக்களில் இருந்தும் ராஜினாமா செய்தார்.

பெனிவால் தனது ராஜிநாமா கடிதத்தை மக்களவை சபைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் சனிக்கிழமை வழங்கினார்.

“நாடாளுமன்ற குழுக்களுடன் பல்வேறு மக்கள் பிரச்னைகளை எழுப்பியவைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது” என பெனிவால் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “பிரச்னைகள் குறித்து கவனிக்காமல் இருப்பதால் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்து நாடாளுமன்றக் குழுக்களில் இருந்து விலகுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து டிசம்பர் 26 ஆம் தேதி ராஜஸ்தானிலிருந்து டெல்லி நோக்கி 2 லட்சம் விவசாயிகள் மற்றும் இளைஞர்களைக் கொண்ட அணிவகுப்பு மேற்கொள்ள உள்ளதாகவும் பெனிவால் அறிவித்துள்ளார்.

பெனிவால் தலைமையிலான ராஷ்டிரிய லோகாந்த்ரிக் கட்சி மத்தியில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.