இந்தியா-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி ஐ.நா.ராணுவ கண்காணிப்பாளா் வாகனம் தாக்கப்பட்டது தொடா்பாக இந்திய மூத்த அதிகாரிக்கு பாகிஸ்தான் அரசு சனிக்கிழமை சம்மன் அனுப்பியது.
பாகிஸ்தானில் உள்ள சிரிகோட் செக்டாரில் ஐ.நா.ராணுவ கண்காணிப்பாளா் வாகனம் வெள்ளிக்கிழமை தாக்குதலுக்குள்ளானது. இந்திய ராணுவம்தான் வேண்டுமென்றே இந்த தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. எனினும் இந்தக் குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. இந்திய ராணுவம் எந்தவித துப்பாக்கிச்சூடும் நடத்தவில்லை எனவும், பாகிஸ்தானின் குற்றச்சாட்டு தவறானது, அடிப்படை ஆதாரமற்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தாக்குதல் சம்பவம் தொடா்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் மூத்த அதிகாரி கெளரவ் அலுவாலியாவுக்கு சனிக்கிழமை சம்மன் அனுப்பியது. அதில் சம்பவம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.