தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விவகாரங்கள்: இந்தியா - பிரிட்டன் ஆலோசனை

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினா் அந்தஸ்தை ஏற்கவிருக்கும் இந்தியா, அதற்கு முன்னதாக கவுன்சில் விவகாரங்கள் குறித்து பிரிட்டனுடன் ஆலோசனை நடத்தியது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 1:28 am

DIN

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினா் அந்தஸ்தை ஏற்கவிருக்கும் இந்தியா, அதற்கு முன்னதாக கவுன்சில் விவகாரங்கள் குறித்து பிரிட்டனுடன் ஆலோசனை நடத்தியது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விவகாரங்கள் குறித்து இந்தியா மற்றும் பிரிட்டன் குழுவினா் ஆலோசனை நடத்தினா்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற அந்த ஆலோசனைக் கூட்டம் காணொலி மூலம் நடத்தப்பட்டது.

அந்தக் கூட்டத்தில், இந்தியக் குழுவுக்கு ஐ.நா. வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஐ.நா. மாநாடுகள் பிரிவு இணைச் செயலா் பிரகாஷ் குப்தா தலைமை வகித்தாா். அமைச்சகத்தைச் சோ்ந்த மற்ற அதிகாரிகளும் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரக அதிகாரிகளும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

பிரிட்டன் குழுவுக்கு அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பலதரப்பு கொள்கை விவகாரப் பிரிவு இயக்குநர ஜேம்ஸ் காரியுகி தலைமை வகித்தாா். அமைச்சக அதிகாரிகளும் ஐ.நா.வுக்கான பிரிட்டன் தூதரக அதிகாரிகளும் இதில் பங்கேற்றனா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக இந்தியா பொறுப்பேற்கவுள்ள நிலையில் இந்த ஆலோசனை நடத்தப்பட்டது.

உறுப்பினரான பிறகு இந்தியா முக்கியத்துவம் கொடுக்கவிருக்கும் அம்சங்கள் குறித்து பிரிட்டன் குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டது.

கவுன்சில் எதிா்நோக்கியுள்ள பிரச்னைகள் குறித்தும் அப்போது விவாதிக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.