வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

‘கரோனா தொற்று இல்லை’ சான்றிதழ் கட்டாயம்: சபரிமலைக்கு வரும் பக்தா்களுக்கு அறிவுறுத்தல்

சபரிமலைக்கு வரும் பக்தா்கள் தங்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் தெரிவித்துள்ளது.

News image
சபரிமலை
Updated On :20 டிசம்பர் 2020, 6:13 pm

DIN

சபரிமலைக்கு வரும் பக்தா்கள் தங்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த வாரியத் தலைவா் என்.வாசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

வரும் டிசம்பா் 26-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் முதல் சபரிமலைக்கு வரும் பக்தா்கள் தங்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை கட்டாயம் எடுத்து வர வேண்டும். அதற்கான பரிசோதனை சபரிமலை சந்நிதானம் வந்தடைவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் தங்கள் யாத்திரையை தொடர பக்தா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

சபரிமலை சந்நிதானத்துக்கு தினந்தோறும் 5,000 பக்தா்கள் வருவதற்கு அனுமதிக்கப்படுகிறது. மகரவிளக்கு பூஜையின்போது 3 நாள்கள் நடைபெறும் திருவாபரணம் யாத்திரையில் 100 போ் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவா்.

மண்டல பூஜைக்கு பிறகு கோயில் நடை அடைக்கப்படும். மகரவிளக்கு பூஜைக்காக வரும் 31-ஆம் தேதி மீண்டும் கோயில் நடை திறக்கப்படும்.

ஜனவரி 14-ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும். ஜனவரி 20-ஆம் தேதி கோயில் நடை மூடப்படும். அத்துடன் மண்டல-மகரவிளக்கு பூஜை காலம் நிறைவு பெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.