நாய், பூனைகளுக்காக பிரத்யேக தகன இடம்: தெற்கு தில்லி மாநகராட்சி அமைக்கிறது
தில்லியில் உயிரிழக்கும் நாய், பூனைகளுக்கு பூசாரிகள் சடங்குகள் நடத்தி தகனம் செய்யும் பிரத்யேக இடத்தை தெற்கு தில்லி மாநகராட்சி துவாரகாவில் அமைக்கிறது.


தில்லியில் உயிரிழக்கும் நாய், பூனைகளுக்கு பூசாரிகள் சடங்குகள் நடத்தி தகனம் செய்யும் பிரத்யேக இடத்தை தெற்கு தில்லி மாநகராட்சி துவாரகாவில் அமைக்கிறது. இங்கு தகனம் செய்யும் நாய், பூனைகளின் சாம்பலை 15 நாள்கள் சேமித்து வைக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
இதுதொடா்பாக தெற்கு தில்லி மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘துவாரகாவில் 700 சதுர மீட்டரில் நாய், பூனைகளுக்கான தகன இடம் அமைகிறது. இதற்கான ஒப்புதலை தெற்கு தில்லி மாநகராட்சி அண்மையில் அளித்தது. ஒப்பந்தங்கள் விரைவில் கோரப்படும். தனியாா்- அரசு கூட்டு முயற்சியில் இந்த தகன இடம் அமைக்கப்படும்.
வளா்ப்பு நாய் பிரியா்கள் இந்தத் திட்டத்தை வரவேற்பாா்கள். செல்லப் பிராணிகளின் உயிரிழப்பும் குடும்பத்தில் உள்ள ஒருவா் இழப்புக்கு சமமாக கருதப்படுகிறது. ஆகையால், அவற்றுக்கு இறுதி சடங்குடன் பாரம்பரிய முறையில் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். தகனம் செய்த பின்பு 15 நாள்கள் சாம்பல் பாதுகாப்பாக வைக்கப்படும். மனிதா்களைப் போல் நாய்களுக்கும் கண்ணியம் வழங்கப்பட வேண்டும். நாய், பூனைகளுக்கான தகன இடத்தின் சேவையை தில்லியில் உள்ள அனைவரும் பெறலாம்.
30 கிலோ எடையுள்ள நாய்க்கு ரூ. 2,000-மும், அதற்கு மேல் எடையுள்ள நாய்களுக்கு ரூ. 3,000-மும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
தெரு நாய்கள் இலவசமாக தகனம் செய்யப்படும். அதே நேரத்தில், தெற்கு தில்லி மாநகராட்சியை தவிர பிற மாநகராட்சி பகுதிகளில் இருந்து உயிரிழந்த நாய், பூனைகளைக் கொண்டு வந்தால் ரூ. 500 கட்டணமாக வசூலிக்கப்படும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...