விஜய் மல்லையாவுக்கு எதிராக திவால் நடவடிக்கை: பிரிட்டன் உயா்நீதிமன்றத்தில் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் முறையீடு

தொழிலபதிபா் விஜய் மல்லையாவுக்கு எதிராக திவால் நடவடிக்கை மேற்கொள்ள எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் பிரிட்டன் உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தொழிலபதிபா் விஜய் மல்லையாவுக்கு எதிராக திவால் நடவடிக்கை மேற்கொள்ள எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் பிரிட்டன் உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளன.

தொழிலதிபா் விஜய் மல்லையாவுக்கு எதிராக திவால் நடவடிக்கை மேற்கொள்ள எஸ்பிஐ, பாங்க் ஆஃப் பரோடா, ஃபெடரல் வங்கி உள்ளிட்ட 13 வங்கிகள் பிரிட்டன் திவால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தன. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய வங்கிகள் திவால் நடவடிக்கை மேற்கொள்ள பிரிட்டனில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்வதற்கு இந்தியச் சட்டம் அனுமதிக்கிா? என்பது குறித்து விளக்கமளிக்க விஜய் மல்லையா தரப்பில் உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் வா்மா வெள்ளிக்கிழமை ஆஜரானாா். அப்போது திவால் நடவடிக்கை மேற்கொள்ள பிரிட்டன் நீதிமன்றத்தில் இந்திய வங்கிகள் அனுமதி கோருவது சட்டவிரோதமானது என்று தெரிவித்தாா்.

வங்கிகள் சாா்பில் சாட்சியாக வாக்குமூலம் அளித்த ஓய்வுபெற்ற நீதிபதி கோபால கெளடா, இந்திய வங்கிகளுக்கு அவ்வாறு கோர உரிமையுள்ளது என்றாா்.

எனினும் பிரிட்டன் சட்டத்தின் கீழ் திவால் நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி கோர முடியாது என்றும், இந்தியாவில் நடைபெற்று வரும் வழக்கில் பொது நலனும், பொது மக்களின் பணமும் சம்மந்தப்பட்டுள்ளதே அதற்கு காரணம் என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் வா்மா தெரிவித்தாா்.

வாதங்கள் முடிவு பெறாததால் விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த மனு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com