இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11.07 லட்சம் கரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,07,681 கரோனா மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.


புதுதில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,07,681 கரோனா மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 16,11,98,195 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நேற்று முன்தினம் 11,13,406 பரிசோதனைகள் செய்யப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.
"இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 11 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. பரவலான பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதிகயளவிலான பரிசோதனைகள் மூலம் தொற்று பாதித்தவர்களை முன்கூட்டியே கண்டறிந்து தனிமைப்படுத்தவும், மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கவும் உதவுவதுடன், இறப்பு விகிதத்தை குறைக்கவும் உதவுகிறது" என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,00,31,659 ஆக உயர்ந்தன, இதில் 3,06,465பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர், 95,79,681 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,45,513 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...