பிரதமரின் விளக்கத்தால் தெளிவு: வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் குழு ஆதரவு

பிரதமரின் விளக்கத்தால் தெளிவு: வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் குழு ஆதரவு

பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கத்தால் வேளாண் சட்டங்கள் குறித்து தெளிவு கிடைத்துவிட்டதாகக் கூறி மேற்கு உத்தரப் பிரதேச விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Published on

பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கத்தால் வேளாண் சட்டங்கள் குறித்து தெளிவு கிடைத்துவிட்டதாகக் கூறி மேற்கு உத்தரப் பிரதேச விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தில்லியில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர தோமரைச் சந்தித்த இந்த விவசாயிகள் குழுவினர், புதிய வேளாண் சட்டங்களுக்கான ஆதரவுக் கடிதத்தை அளித்தனர். இவர்களுடன் உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர்பூர் பாஜக எம்.பி.யும் உடனிருந்தார்.

இந்தக் குழுவை வழிநடத்திய சந்திர மோகன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியது:

"வேளாண் சட்டங்கள் குறித்து எங்களுக்கு சந்தேகம் இருந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்ததையடுத்து, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளோம். வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பலனளிக்கும் எனக் கூறியுள்ளார். நாங்கள் அவரை நம்புகிறோம்."

இதுதவிர்த்து ஏற்கெனவே உத்தரப் பிரதேசம், கேரளம், தமிழகம், தெலங்கானா, பிகார் மற்றும் ஹரியாணா போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்து 10 குழுக்கள் தோமரைச் சந்தித்து வேளாண் சட்டங்களுக்கான ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com