ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

விவசாயிகள் போராட்டத்தில் உத்தரகண்ட் முன்னாள் முதல்வர்

தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.

News image
விவசாயிகள் போராட்டத்தில் உத்தரகண்ட் முன்னாள் முதல்வர்
Updated On :20 டிசம்பர் 2020, 11:34 am

DIN

தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.

தில்லி - உத்தரப்பிரதேச எல்லையான காஸிப்பூர் பகுதியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினார்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தில்லி எல்லைப் பகுதிகளில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் 24-வது நாளாக தொடர்ந்து வருகிறது. விவசாயிகள் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், விவசாயிகளின் போராட்டத்தில் உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும் ஈடுபட்டுள்ளார்.

தில்லி எல்லையான காஸிப்பூர் பகுதியில் விவசாயிகளுடன் கூடி கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.

மேலும், விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.