ராஜஸ்தானில் கடந்த 2 நாள்களாக வெப்பநிலை மிகவும் குறைந்து மலைப்பிரதேசங்களில் ஏற்படும் குளிர்ந்த வெப்பநிலை நிலவி வருகிறது.
மேற்கு ராஜஸ்தானின் மவுண்ட் அபு என்ற பகுதியில் மைனஸ் ஒரு டிகிரி செல்சியஸுக்கும் கீழ் வெப்பநிலை குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாட்டிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது. கடந்த ஆண்டு கோடை காலத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் 50.8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியது.
இதனிடையே தற்போது குளிர்காலத்தையொட்டி ராஜஸ்தான் பகுதியில் வெப்பநிலை குறைந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.
மவுண்ட் அபு பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக மைனஸ் ஒரு டிகிரி செல்சியஸிற்கும் கீழ் வெப்பநிலை குறைந்துள்ளது.
இது குறித்து பேசிய சுற்றுலா பயணி ஒருவர், ராஜஸ்தானில் முதல்முறையாக பனி படர்ந்துள்ளதைக் காண்கிறோம். மணாலியில் இருப்பதைப் போன்று பனி படர்ந்துள்ளது. இது அற்புதமான உணர்வு என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.