தில்லியில் விவசாயிகள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வரும் தில்லி விவசாயிகள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்
தில்லி விவசாயிகள் போராட்டம்
தில்லி விவசாயிகள் போராட்டம்
Updated on
1 min read

பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வரும் தில்லி விவசாயிகள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லியில் விவசாயிகளின் போராட்டம் இன்று 26 ஆவது நாளை எட்டியுள்ளது. தில்லி சிங்கு எல்லையை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் கடும் குளிரிலும் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். 

பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ள அவர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகின்றனர். 

இதன்படி ஒவ்வொரு நாளும் 24 மணி நேரத்திற்கு 11 விவசாயிகள் என ஒவ்வொரு குழுவாக உண்ணாவிரதம் இருக்கவுள்ளனர். ஒவ்வொரு நாளும் உண்ணாவிரதம் இருக்கவுள்ள விவசாயிகளின் பட்டியலும் தயார்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 23 கிசான் திவாஸை முன்னிட்டு அன்றைய நாட்டு மக்கள் அனைவரும் உண்ணாவிரதம் இருக்க கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் டிசம்பர் 25 முதல் 27 ஆம் தேதி வரை ஹரியாணா சுங்கச்சாவடியில் கட்டணமின்றி இலவசமாக வாகனங்கள் செல்லவும் திட்டமிட்டுள்ளனர். 

குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தும் விவசாயிகள் மத்திய அரசுடன் நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் மத்திய அரசின் பரிந்துரைகளை விவசாயிகள் நிராகரித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com