மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி கையெழுத்துகள்: காங்கிரஸ்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் 2 கோடி கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :22 டிசம்பர் 2020, 2:52 pm

DIN


மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் 2 கோடி கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தெரிவித்தது:

"புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி வலியுறுத்த நாடு முழுவதும் சுமார் 2 கோடி கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன. ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள் குழு டிசம்பர் 24-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்திக்கிறது. அப்போது குடியரசுத் தலைவரிடம் இவை சமர்ப்பிக்கப்படும்."

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் தொடர்ந்து 27-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவரம்:

விவசாயிகள் விளை பொருள்களை விரும்பிய முதலீட்டாளர்களிடம், விரும்பிய விலைக்கு விற்பனை செய்யும் வகையிலும், முதலீடுகளை ஈர்க்க வழி செய்யும் வகையிலும் மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்தது.

இந்த புதிய சட்டங்களால், விவசாயிகளின் விளை பொருள்களுக்கு இப்போது இருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணய நடைமுறை ரத்து ஆவதாகவும், எனவே இந்த புதிய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.