பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

லண்டனிலிருந்து தில்லி வந்த 5 பேருக்கு கரோனா தொற்று

லண்டனிலிருந்து தில்லி வந்த 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :22 டிசம்பர் 2020, 7:27 am

DIN

லண்டனிலிருந்து தில்லி வந்த 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் பரவலையொட்டி, அங்கு மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

பிரிட்டனிலிருந்து தற்காலிக விமான சேவையை ரத்து செய்வதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. மேலும் கடந்த சில தினங்களில் பிரிட்டனிலிருந்து இந்தியா வந்த விமானங்களில் பயணித்த பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு லண்டனிலிருந்து தில்லி வந்த விமானத்தில் பயணித்த பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் பயணிகள் 5 பேருக்கும் ஊழியர் ஒருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மற்ற பயணிகள் அனைவரும் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு தொற்று இல்ல என முடிவு வந்தவுடன் வீட்டிற்கு அனுப்பப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.