மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேளாண் சட்டங்கள் விவசாயிகளைப் பிச்சைக்காரர்கள் ஆக்கும்: தேஜஸ்வி

​மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளைப் பிச்சைக்காரர்கள் ஆக்கும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :23 டிசம்பர் 2020, 4:17 pm

DIN


மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளைப் பிச்சைக்காரர்கள் ஆக்கும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:

"விவசாயிகள் பிச்சைக்காரர்கள் ஆவதைத் தடுக்க நாம் அவர்கள் பக்கம் நிற்க வேண்டும். 2006-இல் வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவை நிதிஷ் குமார் அரசு ரத்து செய்தது. அதன் விளைவு, விவசாயிகளால் சந்தைகளைக் கண்டறிய முடியவில்லை. இதனால், இடைத்தரகர்கள் மூலம் குறைந்தபட்ச ஆதார விலைக்கும் குறைவாகவே அவர்கள் விற்பனை செய்கின்றனர்.

விவசாயிகள் தொழிலாளர்களாக மாறுகின்றனர். வேளாண் சட்டங்களை நாம் எதிர்க்கவில்லையென்றால், அவர்கள் பிச்சைக்காரர்களாக மாறிவிடுவார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் அவர்களது நிலங்களைக் கையகப்படுத்திவிடும்.

2022-இல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக மத்திய அரசு வாக்குறுதியளித்துள்ளது. உற்பத்தி செய்த பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கவில்லையென்றால், வருமானம் எப்படி இரட்டிப்பாக்கப்படும் என மோடி அரசைக் கேட்க விரும்புகிறேன். குறைந்தபட்ச ஆதார விலையை சட்டரீதியாக முறைப்படுத்த வேண்டும் என நரேந்திர மோடி மற்றும் நிதிஷ் குமாரை வலியுறுத்துகிறேன்.

விவசாயிகள் நமக்கு உணவளிப்பவர்கள். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் அவர்களை பயங்கரவாதிகள், காலிஸ்தானிகள் என சித்தரிக்கின்றனர். தில்லி போராட்டத்தின்போது 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஒரு தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கூட அவர்களுக்கு மரியாதை செலுத்தவில்லை. மத்திய அரசு மற்றும் பிகார் அரசிடமிருந்து ஒரு அறிக்கைகூட வெளிவரவில்லை. நமது விவசாயிகள் குறித்து ஒரு வார்த்தை பேசுவதற்குக்கூட அவர்களுக்கு நேரமில்லை.

பிகாரிலுள்ள 38 மாவட்ட தலைநகரங்களிலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஏற்பாடு செய்துள்ளது. நமது விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வரை நாங்கள் போராடுவோம்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.