" உரிமைகளுக்காக போராடும் நிலை துரதிருஷ்டவசமானது'
"விவசாயிகளுக்கு உரிய முறையில் மதிப்பளிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை; ஆனால், அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பபது துரதிருஷ்டவசமானது' என்று


மும்பை: "விவசாயிகளுக்கு உரிய முறையில் மதிப்பளிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை; ஆனால், அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பபது துரதிருஷ்டவசமானது' என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவார் கூறியுள்ளார்.
தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு, சரத் பவார் புதன்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் கூறியுள்ளதாவது:
வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த நவம்பர் 26-ஆம் தேதி முதல் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக விளங்கும் விவசாயிகளை உரிய முறையில் மதிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை; ஆனால், துரதிருஷ்டவசமாக விவசாயிகள் இப்போது தங்களது உரிமைகள், கோரிக்கைகளுக்காக போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி, அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...