மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இணைய வழியில் வாக்களிக்க பரிந்துரை

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இணையம் மூலம் வாக்களிக்கும் முறையை கொண்டுவர தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :23 டிசம்பர் 2020, 7:28 am

DIN

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இணையம் மூலம் வாக்களிக்கும் முறையை கொண்டுவர தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 

சட்டத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இணைய முறையில் வாக்களிக்க சட்டத்திருத்தம் கொண்டுவந்தால் வெளிநாட்டில் வாழ்பவர்களும் தேர்தலில் வாக்களிக்க முடியும்.

வெளிநாடு வாழ் இந்தியர்களை தேர்தலில் வாக்களிக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

வெளிநாடுகளில் அந்தந்த நாட்டு தூதரகங்களில் வாக்குச் சாவடிகளை அமைத்து வாக்களிக்க உதவலாம் என்று ஏற்கனவே முன்மொழியப்பட்டது.

மேலும் ஓ.டி.பி., லிங்க் அல்லது மெயில் போன்றவற்றை அனுப்பி இணைய வழியில் வாக்களிக்க வழிவகை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இதில் இணைய வழியில் மின்னணு முறையில் வாக்களிக்கும் முறை இறுதி பரிந்துரையாக  சட்டத்துறையிடம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மின்னணு முறையில் வாக்களிக்க வழிவகை செய்து சட்டம் இயற்றப்பட்டால், அடுத்து நடைபெறும் தேர்தலில் உடனடியாக அமல்படுத்தப்படும் என்று சீதாராம் யெச்சூரி எழுதிய கடிதத்திற்கு தேர்தல் ஆணையம் பதில் கடிதம் எழுதியுள்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.