கர்நாடகத்தில் ஜனவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு: அரசு உறுதி

கர்நாடகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகத்தில் ஜன. 1-ல் பள்ளிகள் திறப்பு உறுதி (கோப்புப்படம்)
கர்நாடகத்தில் ஜன. 1-ல் பள்ளிகள் திறப்பு உறுதி (கோப்புப்படம்)
Updated on
1 min read


கர்நாடகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

லண்டனில் உருமாறிய வீரியம் மிக்க கரோனா தொற்று பரவி வருவது குறித்து கர்நாடகத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பள்ளிகள் திறப்பது குறித்து நிபுணர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இதன் பிறகு பேசிய கர்நாடக கல்வி அமைச்சர் சுரேஷ் குமார், 

''ஜனவரி 1-ஆம் தேதி முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறினார். அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வியளிக்கும் வகையில் வித்யகாமா என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

வித்யகாமா என்ற திட்டத்தின் மூலம் இணையவழிக் கல்வியை மேற்கொள்ள இயலாத 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வீடுகளுக்குச் சென்று பாடங்கள் நடத்தப்படும் என்று கூறினார்.

பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என்ற கட்டாயமில்லை. பெற்றோர்கள் விரும்பினால் மாணவர்களை அனுப்பி வைக்கலாம் என்றும், ஆன்லைன் வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

கரோனா பரவலை கருத்தில் கொண்டு இன்று (டிச. 23) முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை இரவு முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com