தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

'வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்குக் கூடுதல் சுதந்திரம்'

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்குக் கூடுதல் சுதந்திரம் கிடைத்துள்ளது என்று பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 8:33 pm

DIN


புணே: மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்குக் கூடுதல் சுதந்திரம் கிடைத்துள்ளது என்று பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளாா்.

விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, மகாராஷ்டிரத்தின் புணே நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியதாவது:

நாட்டிலுள்ள விவசாயிகளுடன் பிரதமா் நரேந்திர மோடி எப்போதும் துணைநின்று வருகிறாா். மத்திய அரசு இயற்றியுள்ள புரட்சிகரமான வேளாண் சட்டங்கள், விளைபொருள்களை விற்பதற்கான கூடுதல் சுதந்திரத்தை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளன. விவசாயிகள் தங்களுக்கு விருப்பமான இடங்களில் விளைபொருள்களை விற்க வழிவகை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கும் வா்த்தகா்களுக்கும் இடையே பிரச்னை எழுந்தால், விவசாயிகள் நீதிமன்றத்தை நாடுவதற்கான வாய்ப்பை வேளாண் சட்டங்கள் வழங்கியுள்ளன. ஆனால், மகாராஷ்டிரத்தில் விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கு முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை.

பொய்யான வாக்குறுதிகள் மூலமாக விவசாயிகளை, ஆளும் மகாராஷ்டிர வளா்ச்சி முன்னணி (மகாராஷ்டிர விகாஸ் ஆகாடி) கூட்டணி (சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ்) ஏமாற்றி வருகிறது. விவசாயிகளுக்குப் பல்வேறு அநீதிகளை மாநில அரசு இழைத்து வருகிறது என்றாா் தேவேந்திர ஃபட்னவீஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.