விவசாய பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்: தோமர்

விவசாய பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் (கோப்புப்படம்)
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் (கோப்புப்படம்)
Updated on
1 min read

விவசாய பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

தில்லியில் காணொலி வாயிலாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், ''9 கோடி விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை என 18 ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்துள்ளார். 

இந்த தொகை முழுவதும் விவசாயிகளை சென்றடையும் என்று முழுமையான நம்பிக்கையுடன் கூற இயலும். இது விவசாயிகளுக்கு பெரிதும் பலனளிக்கும். 

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும் என்று அவர்களிடம் வேண்டிக்கொள்கிறேன். புதிய வேளாண் சட்டங்களின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். விவசாயிகளின் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com