‘தொலைக்காட்சியில் மட்டும் அக்கறை தெரிவிக்கும் மோடி’: மம்தா விமர்சனம்

பிரதமர் மோடி விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு மாறாக தொலைக்காட்சியில் தோன்றி அக்கறை தெரிவித்து வருகிறார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் தெரிவித்துள்ளார்.
‘தொலைக்காட்சியில் மட்டும் தான் அக்கறை’: பிரதமர் மோடி மீது மம்தா விமர்சனம்
‘தொலைக்காட்சியில் மட்டும் தான் அக்கறை’: பிரதமர் மோடி மீது மம்தா விமர்சனம்
Updated on
1 min read

பிரதமர் மோடி விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு மாறாக தொலைக்காட்சியில் தோன்றி அக்கறை தெரிவித்து வருகிறார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி 6 மாநில விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், மேற்கு வங்கம் தான் மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்தாத ஒரே மாநிலம் எனவும், முதல்வர் மம்தாவின் சித்தாந்தங்கள் மாநிலத்தை அழித்து வருகின்றன எனவும் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “பிரதமர் மோடி விவசாயிகளின் பிரச்னைகளுக்கு விரைந்து செயல்பட்டு தீர்வு காணாமல் தொலைக்காட்சிகளில் தோன்றி அக்கறை காட்டி வருகிறார்” எனத் தெரிவித்தார்.

மேலும் பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் மூலம் தான் விவசாயிகளுக்கு உதவ விரும்புவதாக தெரிவித்த மோடி உண்மையில் பாதி உண்மையின் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்த முயல்கிறார் என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய மம்தா, “மேற்கு வங்கத்திற்கு மோடி அரசு எதுவும் செய்யவில்லை. ரூ.8000 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையில் ஒரு பகுதியை கூட மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை” எனக் குற்றம்சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com