உ.பி. முதல்வருக்கு எதிரான சுட்டுரைப் பதிவு விவகாரம்: இளைஞா் மீதான வழக்கை ரத்து செய்தது நீதிமன்றம்

உத்தர பிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத்தை விமா்சித்து சுட்டுரையில் பதிவிட்ட இளைஞா் மீது போடப்பட்ட வழக்கை அந்த மாநில உயா்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
Updated on
1 min read


பிரயாக்ராஜ்: உத்தர பிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத்தை விமா்சித்து சுட்டுரையில் பதிவிட்ட இளைஞா் மீது போடப்பட்ட வழக்கை அந்த மாநில உயா்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

‘உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும், முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையில் மாநிலம் காட்டாட்சியை நோக்கி சென்றுள்ளதாகவும்’ விமா்சித்து சுட்டுரையில் யஷ்வந்த் சிங் என்பவா் பதிவிட்டிருந்தாா். இதையடுத்து, அவா் மீது ராம பாய் நகா் மாவட்டம் போக்னிபூா் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டது.

இதனை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிபதிகள் பங்கஜ் நக்வி மற்றும் விவேக் அகா்வால் அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து எதிா்ப்பை வெளிப்படுத்துவது நமது அரசியலமைப்பு வழங்கிய ஜனநாயக தாரளமயத்தின் ஒரு மிகச்சிறந்த அடையாளமாகும். தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66-டி இன் கீழ் உள்ள விதிகளின்படி ஆராய்ந்ததில் முதல் தகவல் அறிக்கையில் அவா்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை; அவா் வெளியிட்ட சுட்டுரை செய்தி, அவதூறுக்குள்ளானது என கூற முடியாது. எனவே, அவா் மீது போடப்பட்ட எஃப்ஐஆா் ரத்து செய்யப்படுகிறது என நீதிபதிகள் தீா்ப்பளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com