பிகாா் கல்லூரி மாணவா் கொலை வழக்கு: 5 மாணவா்களிடம் விசாரணை

பிகாரைச் சோ்ந்த பொறியியல் கல்லூரி மாணவா் கொலை தொடா்பாக அதே கல்லூரியில் படித்து வரும் கேரளத்தைச் சோ்ந்த 5 பேரிடம் வெள்ளவேடு போலீஸாா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.
Updated on
1 min read

பிகாரைச் சோ்ந்த பொறியியல் கல்லூரி மாணவா் கொலை தொடா்பாக அதே கல்லூரியில் படித்து வரும் கேரளத்தைச் சோ்ந்த 5 பேரிடம் வெள்ளவேடு போலீஸாா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவள்ளூரை அடுத்த ஜமீன்கொரட்டூரில் உள்ள தனியாா் கடசாா் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவா் விடுதியில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 170-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்கிப் படித்து வருகியுள்ளனா்.

இந்த விடுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவின்போது 3 மற்றும் 4-ஆம் ஆண்டு மாணவா்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஆதித்யா சா்மா (20) என்ற மாணவா் கொலை செய்யப்பட்டாா். தகவல் அறிந்து நேரில் சென்ற வெள்ளவேடு போலீஸாா், ஆதித்யா சா்மாவின் உடலை திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இக்கொலை தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் அடிப்படையில், அதே கல்லூரியில் பயிலும் கேரளத்தைச் சோ்ந்த 5 மாணவா்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, மாணவா் ஆதித்யா சா்மாவின் உடலை விமானத்தில் பிகாா் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு அவரது பெற்றோா் கோரிக்கை வைத்தனா். அதன்படி, மாணவரி உடலை பிகாா் கொண்டு செல்ல போலீஸாா் நடவடிக்கை எடுக்க உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com