தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தில்லியில் இன்று புதிதாக 655 பேருக்கு கரோனா

தில்லியில் இன்று புதிதாக 655 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

News image

கோப்புப்படம்

Updated On :26 டிசம்பர் 2020, 4:35 pm

DIN

தில்லியில் இன்று புதிதாக 655 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  
இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் 67,115 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 40,138 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 26,977 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 
அதில் 655 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,22,094 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று 23 போ் உயிரிழந்தனா்.
இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 10,437 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து, 988 போ் மீண்டுள்ளனா். 
இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 6,04,746-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 6,911 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 3,544 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.  
தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 16,149 படுக்கைகள் காலியாக உள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.