தாணே குடிசைப் பகுதியில் தீ விபத்து: 8 குடிசைகள் சேதம்

மகாராஷ்டிரத்தில் தாணே குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 குடிசைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. மக்கள் உடனடியாக வெளியேறியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.
தாணே குடிசைப் பகுதியில் தீ விபத்து: 8 குடிசைகள் சேதம் (கோப்புப்படம்)
தாணே குடிசைப் பகுதியில் தீ விபத்து: 8 குடிசைகள் சேதம் (கோப்புப்படம்)
Updated on
1 min read

மகாராஷ்டிரத்தில் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 குடிசைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. மக்கள் உடனடியாக வெளியேறியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலத்தில் தாணேயிலுள்ள பிவாண்டி குடிசைப் பகுதியில் இன்று (டிச.26) அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

மக்கள் உடனடியாக குடிசைகளிலிருந்து வெளியேறி, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

உடனடியாக 2 தீயணைப்பு வாகனங்களுடன் நிகழ்விடத்திற்கு வந்த வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

குடிசைகள் அருகருகே இருந்ததால், தீ வேகமாக பரவியதாகவும், இதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் பிவாண்டி மாநகராட்சி தீயணைப்புத்துறை தலைமை அதிகாரி ராஜேஷ் பவார் தெரிவித்தார்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com