கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இமாசலில் பனிமழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

இமாசலப்பிரதேசத்தில் பெய்து வரும் பனிமழை காரணமாக சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News image

இமாசலில் பனிமழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி (கோப்புப் படம்)

Updated On :28 டிசம்பர் 2020, 9:50 am


இமாசலப்பிரதேசத்தில் பெய்து வரும் பனிமழை காரணமாக சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுற்றுலாத் தலமாக விளங்கும் இமாசலப்பிரதேசம் ஷிம்லாவில், நேற்று நள்ளிரவு முதல் பனிமழை பெய்து வருகிறது. இதனால், சுற்றுலா வந்திருக்கும் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேவேளையில் ஷிம்லாவில் இன்றும் பனிமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதில், ஷிம்லா, கின்னௌர், லஹௌல்-ஸ்பிடி மற்றும் சம்பா, கங்கா, மண்டி ஆகிய பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பனிமழை பெய்யும் என்று ஷிம்லாவின் வானிலை ஆய்வு இயக்குநர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாட ஷிம்லா சென்றிருக்கும் சுற்றுலாப் பயணிகள், பனிமழையில் விளையாடி மகிழ்ந்தனர். பலரும் தங்கள் வாழ்நாளில் முதல் முறையாக பனிமழையை நேரில் பார்ப்பதாக உற்சாகத்தோடு கூறியுள்ளனர்.

இந்த குளிர் காலத்தின் முதல் பனி மழை என்பதால், சுற்றுலாவை நம்பியிருக்கும் தொழிலாளர்களும், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான பகுதிகள் மற்றும் முக்கியச் சாலைகள், வெள்ளை பனித்துகள்களால் மூடப்பட்டு ரம்மியமாகக் காட்சியளிக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.