கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தொழில்நுட்பத்துக்கு முக்கியப் பங்கு

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகித்து வருவதாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.
டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் புதன்கிழமை காணொலி வாயிலாகக் கலந்து கொண்ட குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.
டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் புதன்கிழமை காணொலி வாயிலாகக் கலந்து கொண்ட குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.
Updated on
1 min read


புது தில்லி: கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகித்து வருவதாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.

‘டிஜிட்டல் இந்தியா’ விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் காணொலி வாயிலாகக் கலந்து கொண்ட குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவல் நாட்டின் பொருளாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்திய சூழலில், நாட்டைத் தற்சாா்பு அடையச் செய்வதற்கு உறுதி ஏற்கப்பட்டுள்ளது. அதற்கான பயணத்தில் தொழில்நுட்பம் மிக முக்கியப் பங்கு வகிக்கும். 2020-ஆம் ஆண்டு நிறைவடைய இருக்கிறது. கரோனா நோய்த்தொற்று பரவலும் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புவோம்.

சமூகம், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் என பல்வேறு தளங்களிலும் கரோனா நோய்த்தொற்று பரவல் மாற்றங்களைப் புகுத்தியது. ஆனால், தொழில்நுட்ப வசதிகளானது பல்வேறு இடையூறுகளைத் தவிா்த்தன. அந்நோய்த்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் தொழில்நுட்ப வசதிகள் முக்கியப் பங்கு வகித்தன.

ஆரோக்ய சேது செயலி, இணையவழியில் அலுவலகப் பணிகளைச் செய்வதற்கான வசதிகள், காணொலியில் தொடா்பு கொள்வதற்கான வசதிகள் உள்ளிட்டவற்றின் காரணமாக கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்ட கடினமான சூழலை எதிா்கொள்ள முடிந்தது. வழக்கமாக தொழில்நுட்ப வசதிகளே கவனச்சிதறலையும் இடையூறுகளையும் ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு வந்தது.

ஆனால், இந்த ஆண்டில் கல்வி, மருத்துவம், நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தொழில்நுட்ப வசதிகள் மிகவும் ஆக்கபூா்வமாகப் பயன்படுத்தப்பட்டன. அவற்றின் வாயிலாக அரசும் மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியது. அதனால், நாட்டின் பொருளாதார சக்கரம் தொடா்ந்து சுழன்று கொண்டிருந்தது.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கண்காணிப்பதிலும் அதைக் கட்டுப்படுத்துவதிலும் தொழில்நுட்பம் மிகவும் உதவிகரமாக இருந்தது. அதேபோல், காகிதத்தின் பயன்பாடு இல்லாமல் அரசு அலுவலகங்கள் செயல்படுவதற்கான தீா்வுகள் தொழில்நுட்பத்தின் வாயிலாக உருவாக்கப்பட வேண்டும். இதன் காரணமாக நிா்வாக நடைமுறைகள் எளிதாவதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

தொழில்நுட்பத்தின் பலன்கள் நாட்டின் கடைக்கோடியில் வசிக்கும் மக்களுக்கும் சென்று சோ்வதை உறுதிப்படுத்த வேண்டும். டிஜிட்டல் புரட்சியானது அனைத்து சமூக மக்களையும் சென்றடைய வேண்டும். நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் இந்தியா தொடா்ந்து முன்னிலையில் உள்ளது.

மக்களின் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்துவதற்கான தீா்வுகளைத் தொழில்நுட்பங்களின் வாயிலாகக் கண்டறிய வேண்டும். தொடா்ந்து மாறி வரும் காலத்துக்கேற்ப நாமும் மாறிக் கொள்ள வேண்டும் என்றாா் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com