2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

தில்லியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை

தில்லியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :31 டிசம்பர் 2020, 6:28 am

DIN

தில்லியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி தலைமைச் செயலரும் தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவருமான விஜய் தேவ் இதற்கான அறிவிப்பை நேற்று (டிச.30) வெளியிட்டுள்ளார்.

இரவு நேர பொதுமுடக்கத்தின்போது பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்றும், வாகன போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் விஜய் தேவ் கூறினார்.

தில்லியில் கரோனா பரவல் அதிகரிப்பதற்கு ஏற்ப ஒரு சில பகுதிகளில் இரவுநேர பொதுமுடக்கம் அறிவிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கடந்த 28-ஆம் தேதி அறிவுறுத்திய நிலையில், தில்லியில் இரண்டு நாள்களுக்கு இரவு நேர பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.