அவுரங்காபாத்: மகாராஷ்டிராவில் தலித் பெண் ஒருவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுரங்காபாத் அருகே சில்லோட் அந்தாரி கிராமத்தில் 50 வயதான தலிப் பெண் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அங்குள்ள டாஸ்மாக் உரிமையாளரான சந்தோஷ் மொஹைட் அப்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். அவரைத் தடுத்துநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்ட தலித் பெண்ணை, தூக்கி வீசி தாக்கி, அவரது உடலில் மண்ணெண்னை எடுத்து, ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
அலறல் சத்தத்துடன், வீட்டிலிருந்து புகை ஏற்படுவதைக் கண்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அந்த பெண்ணை அங்குள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், 95 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பெண்யின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்து கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், மேலும் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கங்களைக் கண்டறியவும் முயற்சி செய்து வருவதாக அவுரங்காபாத் போலீஸ் கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், வர்தாவில் உள்ள ஹிங்காங்கட் நகரில் கடந்த திங்கள்கிழமை காலை 25 வயது பெண் விரிவுரையாளர் அங்கிதா பிசுடே கல்லூரி வளாகத்தில் எரித்த 36 மணி நேரத்திற்குள் மகாராஷ்டிராவில் நடந்த 2வது சம்பவம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்திற்குக் கிராமத்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


