தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தேர்தல் நாளில் பெண்களுக்கு எதிராக டிவீட் செய்து சிக்கிய முதல்வர் கேஜரிவால்

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நாளில், பெண்களுக்கு எதிராக டிவீட் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.

News image
Updated On :8 பிப்ரவரி 2020, 12:10 pm

IANS


புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நாளில், பெண்களுக்கு எதிராக டிவீட் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, வாக்களிக்கச் செல்லுங்கள். அனைத்துப் பெண்களுக்கும் எனது சிறப்பான வேண்டுகோள். வீட்டில் எப்படி உங்களது கடமையை ஆற்றுகிறீர்களோ? அதேப்போல, நாட்டிலும், தில்லியிலும் உங்கள் கடமையை ஆற்ற வேண்டும். அனைத்துப் பெண்களும் சென்று வாக்களியுங்கள். வாக்களிக்கச் செல்லும் போது வீட்டில் இருக்கும் ஆண்களையும் அழைத்துச் செல்லுங்கள். அப்போது, யாருக்கு வாக்களித்தால் சிறப்பாக இருக்கும் என்பதை ஆண்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு வாக்களியுங்கள் என்று ஹிந்தியில் டிவீட் செய்துள்ளார்.

இதற்கு மத்திய பெண்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இந்த கருத்து பெண்களுக்கு எதிரான கருத்து என்று தெரிவித்துள்ளார். மேலும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவெடுக்கும் சக்தி கூட பெண்களுக்கு இல்லை என்று கருதுகிறீர்களா என்றும் ஸ்மிருதி இராணி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.