தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

களத்தில் நின்ற 5 இஸ்லாமிய வேட்பாளர்களும் வெற்றி: இஸ்லாமிய மக்களின் நம்பிக்கையை வென்ற ஆம் ஆத்மி!

நடைபெற்று முடிந்துள்ள தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக நிறுத்தப்பட ஐந்து இஸ்லாமிய  வேட்பாளர்களும் வென்றிருப்பதன் மூலம், பாஜகவை எதிர்கொள்ள சரியான தேர்வாக ....

News image

கோப்புப்படம்

Updated On :11 பிப்ரவரி 2020, 1:57 pm

IANS

புது தில்லி: நடைபெற்று முடிந்துள்ள தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக நிறுத்தப்பட ஐந்து இஸ்லாமிய  வேட்பாளர்களும் வென்றிருப்பதன் மூலம், பாஜகவை எதிர்கொள்ள சரியான தேர்வாக இஸ்லாமிய மக்களின் நம்பிக்கையை அக்கட்சி பெற்றுள்ளது உறுதியாகியுள்ளது.

நடைபெற்று முடிந்துள்ள தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக இஸ்லாமிய மக்கள் அதிகமுள்ள இடங்களில் ஐந்து இஸ்லாமிய சமூக வேட்பாளர்கள் களம் கண்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் அவர்கள் அனைவருமே வெற்றி பெற்றுள்ளனர்.

ஒக்லா தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் அமானத்துல்லா கான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பர்வேஸ் ஹஸ்மியை வெற்றி கண்டார். இந்த் தொகுதியில் ஹஸ்மி டெபாசிட் கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.       

சீலம்பூர் தொகுதி வேட்பாளர் அப்துல் ரெஹ்மான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சஞ்சய் ஜெயினை தோற்கடித்தார். காங்கிரஸ் வேட்பாளரும், ஐந்து முறை எம்.எல்.ஏவாக இருந்தவருமான மடின் அகமதுவால் மூன்றாவது இடத்தையே  பிடிக்க முடிந்தது.

பல்லிமரான் தொகுதி வேட்பாளர் இம்ரான் ஹுசைன் பாஜகவின் லதா சோதியை தோற்கடித்தார். காங்கிரஸ் வேட்பாளரும் ஐந்து முறை எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான ஹாரூன் யூசுப் மூன்றாவது இடம்தான் பிடித்தார்.

மட்டியா மஹால் தொகுதியில் வேட்பாளர் சோயிப் இக்பால் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி வென்றார்.

இறுதியாக முஸ்தபாபாத் தொகுதி வேட்பாளர் ஹாஜி யூனுஸ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ஜகதீஷ் பிரதானை வென்றார். இத்தொகுதியில் போட்டியிட்ட அலி மெஹ்தியால் ஐந்து இலக்க வாக்குகளையே தாண்ட இயலவில்லை.   2015-ஆம் ஆண்டில் பாஜக வென்ற மூன்று தொகுதிகளில் இந்த தொகுதியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றிகளின் மூலம் தேசிய கட்சியான காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி பாஜகவை எதிர்கொள்ள சரியான மாற்றாக ஆம் ஆத்மி தன்னை வலுவாக முன்னிறுத்தியுள்ளது என்று கூறலாம்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.