தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

துபை: மனைவியைக் காப்பாற்றச் சென்ற கேரள இளைஞருக்கு 90% தீக்காயம்

துபையில் வசித்து வரும் கேரள இளைஞர், தனது மனைவியைக் காப்பாற்றச் சென்று 90% தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகிறார்.

News image
Updated On :12 பிப்ரவரி 2020, 11:03 am

IANS


துபை: துபையில் வசித்து வரும் கேரள இளைஞர், தனது மனைவியைக் காப்பாற்றச் சென்று 90% தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகிறார்.

துபையில் உள்ள உம் அல் குவைன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் அனில் நினன் 90% தீக்காயங்களுடன் அபு தாபியில் உள்ள மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். அவருக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று அனிலின் உறவினர் கூறியுள்ளார்.

அவரது மனைவி நீனுவும், அதே மருத்துவமனையில் 10% தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, நீனு மீது தீப்பற்றியது. அவரைக் காப்பாற்றச் சென்ற நினனும் தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். நினன் மற்றும் நீனு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக நண்பர்கள் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.