ஐந்து மாத குழந்தை வன்புணர்ந்து கொலை: தாயின் சகோதரரால் நிகழ்ந்த கொடூரம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஐந்து மாத குழந்தை தாயின் சகோதரரால் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழந்துள்ளது.

கோப்புப் படம்

கோப்புப் படம்
லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஐந்து மாத குழந்தை தாயின் சகோதரரால் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது ஐந்து மாத பெண் குழந்தையுடன் அருகில் உள்ள மண்டியன் பகுதியில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் திருமணத்திற்குச் சென்றிருந்தார். திருமணம் நடக்கும் சமயத்தில் குழந்தையை பெண்ணின் சகோதரரான பப்பு என்பவர் விளையாடத் தூக்கிச் சென்றார்.
சிறிது நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. எனவே அந்தப் பெண்ணும் அவரது உறவினர்களும் பப்புவையும் குழந்தையையும் தேடத் துவங்கினர். அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக குழந்தை திருமண மணடபத்தில் இருந்து சிறிது தூரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தரையில் கிடந்தது. அவர்கள் உடனே முதலில் குழந்தையை அருகில் உள்ள விவேகானந்தா மருத்துவமனைக்கும் அங்கிருந்து மாவட்ட உயர் சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை மரணமைந்தது.
இதையடுத்து குழந்தையின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து குற்றவாளி பப்புவைத் தேடி வருவதாக, பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரித்து வரும் மாவட்ட காவல்துறை இணை ஆணையர் ஷாலினி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...