ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

குருக்ஷேத்திரத்தில் அமோனியா வாயு கசிவு: 15 பேர் மருத்துவமனையில் அனுமதி

குருக்ஷேத்திரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள ஷாபாத் மார்க்கண்டாவில்

News image
Updated On :19 பிப்ரவரி 2020, 7:04 am

PTI

குருக்ஷேத்திரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள ஷாபாத் மார்க்கண்டாவில் உள்ள குளிர்பதனக் கிடங்கில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

செவ்வாய்க்கிழமையான நேற்றிரவு 9 மணியளவில் குளிர்பதனக் கிடங்கில் அமோனியா கசிவு ஏற்படத் தொடங்கியுள்ளது. அப்போது, கிடங்கில் வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் இரவு உணவிற்காக வெளியே சென்றிருந்தனர்.  இந்நிலையில், அமோனியா வாயு அருகில் வசிக்கும் குடியிருப்புகளுக்குப் பரவியது. 

குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அதில், 15 பேர் ஷாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவர் குருக்ஷேத்ராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். சிகிச்சைக்குப் பின் சிலர் வீடு திரும்பினர். 

சம்பவ இடத்துக்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சுரிந்தர் சிங் கூறுகையில், 

தீ விபத்துத்துறை ஊழியர்களின் உதவியுடன் இந்த வாயு கசிவு நேற்றிரவு சரிசெய்யப்பட்டது. 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25 பேர் முதலுதவிக்குப் பின் வீடு திரும்பினர். பொதுமக்கள் தரப்பில் எந்த புகாரும் வராததால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.